விளையாட்டு போட்டிகள் 18 TH JUNE
டென்னிஸ்
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், ஜூன் 30-ஜூலை 13ல் லண்டனில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் பிரிட்டனில் ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது.இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி ஜோடி, செக்குடியரசின் ஜாகுப், டென்மார்க்கின் ஹோல்கர் ஜோடியை சந்தித்தது.
'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் இரு செட்டை இரு ஜோடியும் மாறி மாறி வசப்படுத்தின. அடுத்து எடுத்து நடந்த நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' போபண்ணா ஜோடி (10-6) வென்றது.ஒரு மணி நேரம், 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 7-6, 6-7, 10-6 வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
வாலிபால்
உஸ்பெகிஸ்தானில் 16, 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சர்வதேச தேசிய லீக் வாலிபால் தொடர் நடந்தது. இந்திய அணி 19 வயது பிரிவில் பங்கேற்றது. முதல் 5 போட்டியில் 3 வெற்றி, 2 தோல்வியடைந்தது இந்திய அணி. பின் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, கிர்கிஸ் தான் மோதின. முதல் 'செட்டை இழந்த இந்தியா (21-25) அடுத்த மூன்று செட்டுகளையும் 25-14, 25-08, 25-23 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய அணி 3-1 என வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றியது.
0
Leave a Reply