25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Nov 10, 2025

உலக கோப்பை செஸ் தொடரில் நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார் கார்த்திக் வெங்கடராமன்.

உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில் , 4வது சுற்றுக்கு இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஹரிகிரிஷ்ணா பிரக்ஞானந்தா, பிரனவ் முன்னேறினர். 'நடப்புஉலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ் 3வது சுற்றில் தோல்வியடைந்தார்.நேற்று, 3வது சுற்றுக்கான 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் தமிழகத்தின் கார்த்திக் வெங்கடராமன், ருமேனியாவின் போக்டன்-டேனியல் டீக் மோதினர். முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் கார்த்திக் வெற்றி பெற்றார். முடிவில் கார்த்திக் 2.5- 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்தியா சார்பில் 5 பேர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.

Nov 10, 2025

டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா புதிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.

டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் ,சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், உலகின் 'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்ற ,ஒற்றையர் பிரிவுபைனலில், உலகின் 'நம்பர்-1' பெலா ரசின் அரினா சபலென்கா, 6வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ரிபாகினா, 'டை பிரேக்கர்' வரை சென்று 2வது செட்டை 7-6 என கைப்பற்றினார்.ஒரு மணி நேரம், 47 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ரிபாகினா 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Nov 10, 2025

ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் இந்தியா 260 தங்கப் பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தை வென்றது.

23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னைநேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த 35-100 வயதுடைய 3,500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.போட்டிகள் நேற்று நிறைவுற்றன. இந்தியா 260 தங்கம், 253 வெள்ளி, 277 வெண்கலம் என மொத்தம் 790 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இரண்டாவது இடத்தை இலங்கை (39 தங்கம், 50 வெள்ளி, 39 வெண்கலம்), மூன்றாவது இடத்தை தாய்லாந்து (39-தங்கம், 26 வெள்ளி, 11 வெண்கலம்) பெற்றன. 

Nov 08, 2025

இந்தியா ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்407 பதக்கங்களை வென்றது.

தமிழக மாஸ் டர்ஸ் தடகள சங்கம், இந்திய தடகள கூட் டமைப்பு,  சார்பில், 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப், சென்னை, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் 20க்கும்அதிகமான ஆசிய நாடுகளைச் சேர்ந்த, 35 வயது முதல் 100 வயது வரை உள்ள, 3,500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 14 பிரிவுகளில்போட்டி நடக்கின்றன.நேற்று இரண்டாவது நாளில் பல்வேறு பிரிவுகளில் 100 மீ., ஓட்டம் நடந்தன. இந்தியாவின் ஜஸ்பிந்தர் சிங் பாஜ்வா 55 வயதுக்கு மேற்பட்டோர் 100 மீ., தடை ஓட்டத்தில் (15.69  வினாடி) தங்கம் வென்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் தம்பல் ஷர்மா (13.26, + 65 வயது), விஜயன் (14.37, + 70), மணச்சந்த் சிங் (15.73, +75), தங்கம் வென்றனர்.இரண்டாம் நாள் முடிவில், இந்திய ஆண்கள் (69 தங்கம், 70 வெள்ளி, 69 வெண்கலம்), பெண்கள்அணி(59+68+72) மொத்தம் 128 தங்கம் உட்பட 407 பதக்கங்களை வென்றது. 

Nov 08, 2025

செஸ் உலககோப்பை 11வது சீசன் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், பிரனவ் வெற்றி.

செஸ் உலககோப்பை 11வது சீசன் கோவாவில் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன் குகேஷ், அர்ஜுன் உட்பட 10 இந்திய வீரர்கள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.நேற்று மூன்றாவது சுற்றின் முதல் போட்டி நடந்தது. இந்திய வீரர் அர்ஜுன், உஸ்பெகிஸ்தானின் ஷம்சிதினை சந்தித்தார். அர்ஜுன், 30வது நகர்த்தலில் வெற்றி பெற்று, 1.0-0 என முன்னிலை பெற்றார். இன்று இரண்டாவது போட்டியை 'டிரா' செய்தால், நான்காவது சுற்றுக்கு முன்னேறலாம்.இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, முதல் போட்டியில் பெல்ஜியத்தின்  டேனியலை 1.0-0 வென்று என முன்னிலை பெற்றார். இந்திய வீரர் பிரனவ், லிதுவேனியாவின் திதாசை 102வது நகர்த்தலில் வென்றார். குகேஷ், ஜெர்மனியின் பிடரெரிக்கை சந்தித்தார். குகேஷ், 34 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். கடந்த உலக கோப்பை தொடரில் பைனலில் பங்கேற்ற, இந்தியாவின் பிரக்ஞா னந்தா, ஆர்மேனியாவின் ராபெர்ட்டை எதிர்கொண் டார்.பிரக்ஞானந்தா, 30 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.

Nov 08, 2025

தேசிய சப்-ஜூனியர் கால்பந்து தொடரில் தமிழக அணி வெற்றி பெற்று, அடுத்த கட்ட சுற்றுக்கு தகுதி பெற்றது.

தேசிய சப்-ஜூனியர் கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்கிறது. தமிழக அணி 'டையர்-2'ல் 'டி' பிரிவில் புதுச்சேரி, மத்திய பிரதேசத்துடன் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது.சத்தீஷ்கரில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் தமிழகம், புதுச்சேரி அணிகள் மோதின.   இப்போட்டியில் தமிழக அணி 15-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த கட்ட சுற்றுக்கு தகுதி பெற்றது. 

Nov 07, 2025

T-20 தொடரில் நான்காவது போட்டியில், இந்திய அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட T-20' தொடரில் பங்கேற்கிறது. கோல்டு கோஸ்டில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த நான்காவது போட்டியில் 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 167/8 ரன் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி ரன் 18.2 ஒவரில் 119 ரன்னுக்குஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இந்தியா, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் விருதை அக்சர் படேல் (21 ரன், 2 விக்கெட்) வென்றார். ஐந்தாவது போட்டி நாளை  பிரிஸ்பேனில் நடக்க உள்ளது.  

Nov 07, 2025

உலக கோப்பை வென்றஇந்திய பெண்கள் அணிக்கு ஜனாதிபதி  திரவுபதி முர்மு பாராட்டு.

 நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை ,உலக கோப்பை வென்றஇந்திய பெண்கள் அணியினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, வீராங்கனைகள் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினர். 'பல்வேறு பகுதிகள், வித்தியாசமான சமூக பின்னணி, சூழல்களில் இருந்து வந்து, இந்தியா என ஒரு அணியாக விளையாடி சாதித்துள்ளீர்கள் ., இளம் தலை முறையினர், பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட தூண்டுகோலாக அமைந்துள்ளது, ' என ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nov 07, 2025

ஐந்து போட்டிகள் கொண்ட T-20 தொடரில் நியூசிலாந்து அணி  வெற்றி .

வெஸ்ட் இண்டீஸ் அணிநியூசிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட T-20 தொடரில்பங்கேற்று,முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. நேற்று இரண்டாவதுபோட்டி ஆக்லாந்தில் 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிபீல்டிங்தேர்வு செய்தது.நியூசிலாந்து அணி 20 ஓவரில் 207/5 ,வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 204/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 

Nov 06, 2025

டபிள்யு. டி.ஏ., 'பைனல்ஸ்' டென்னிஸ் தொடரில்அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி.

டபிள்யு. டி.ஏ., 'பைனல்ஸ்' டென்னிஸ் தொடர் சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் ,உலகின் 'டாப்-8' வீராங்கனைகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றனர்.இதன் 'ஸ்டெபி கிராப்' பிரிவில் உலகின் 'நம்பர் -1' சபலென்கா (பெலா ரஸ்), 'நடப்பு சாம்பியன்' கோகோ காப் (அமெ ரிக்கா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பாவோலினி (இத்தாலி) இடம் பெற்றுள்ளனர்.முதல் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சகவீராங்கனை ஜெசிகா பெகுலாவிடம் தோல்வியடைய, இரண்டாவது போட்டியில் கோகோ காப், ஜாஸ் மின் பாவோலினியை 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று,முதல் வெற்றியைபதிவு செய்தார்.2வது மற்றொரு போட்டியில் அரினா சபலென்கா 6-4, 2-6, 6-3 என ஜெசிகா பெகுலாவை தோற்கடித்து, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவுசெய்தார்.

1 2 ... 75 76 77 78 79 80 81 ... 158 159

AD's



More News