ஜூன் 20ல் 3 படங்கள் வெளியாக உள்ளன. படம் நாளை ரிலீசாகிறது.
.ஜூன் 20ல் தனுஷ், நாகார்ஜுனா ராஷ்மிகா நடித்துள்ள 'குபேரா' படமும், அதர்வா, நிமிஷா சஜ யன் நடிப் பில் 'டிஎன்ஏ' படமும், வைபவ், அதுல்யா ரவி நடித்துள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படமும் வெளியாகின்றன. இவற்றில் தனுஷின் குபேரா படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. இதை தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி உள்ளா ர். தமிழ் சினிமாவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.இரண்டரை மணிநேரத்திற்கு மேல் இருந்தாலே ரசிகர்க ளுக்கு ஒருவித அயற்சியை தருகிறது. இதற்கு முன் தமிழில் அதிக நேரம் ஓடும் படங்களாக 2005ல் 'தவமாய் தவமிருந்து' (3:34 மணிநேரம்), 2000ல் 'ஹே ராம்' (3:30 மணிநேரம்), 2021ல் 'நண்பன்' (3:08 மணிநேரம்), 2022ல் 'கோப்ரா' (3:03 மணி நேரம்) ஆகியவை இருந்தன. இதற்கு அடுத்து 3 மணி நேரம் 2 நிமிடங்களுடன் தனுஷின் 'குபேரா' 5வது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் இருந்த நிலையில் சென்சார் வாங்கி, பின்னர் 13 நிமிடங்களைக் குறைத்துள்ளனர்..
0
Leave a Reply