பால் பாயாசம் சுவையாக இருக்க....
பால் பாயாசம் செய்யும் பொழுது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.
தேங்காய் எடுக்க சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை அடுப்பில் வைத்து லேசாக வாட்டி எடுத்தால், தேங்காய் எளிதாக எடுக்க வரும்.
பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.
முட்டை கெட்டுப் போகாமல் இருக்க முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க 2 கிராம்பு அதில் போட்டு வைத்தால் எறும்பு வராது
0
Leave a Reply