வெண்டைக்காய் பொரியல் ருசியாக இருக்க....
வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது கடைசியாக கடலைமாவு அல்லது வேர்க்கடலை பொடி தூவி அடுப்பை குறைந்த தீயில் வைத்து. கிளறி இறக்கினால்| ருசியாக இருக்கும்.
கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் விரைவில் ஆக்சிஜனேற்றம் அடையக்கூடிய தன்மை உடையது. எனவே கத்தரிக்காயை உப்பு மற்றும் மஞ்சள் தூவி சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து சேமித்து வைப்பது சிறந்தது.
பால் பொங்கி கீழே வடியாமல் இருக்க, பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே வராது.
தயிர் புளிக்கின்ற நிலை வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் அதிகமாக புளிக்காது.
அரிசியில் பூச்சி வராமல் இருக்க, வர மிளகாய் அல்லது பிரியாணி இலை இதில் ஏதாவது ஒன்றை அரிசியில் போட்டு வைத்தால் பூச்சி வராது.
0
Leave a Reply