சீனாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பாண்டா கரடி இல்லாததால் அதற்கு பதிலாக நாய்க்கு பாண்டா கரடி போல வேஷமிட்டு வைத்திருந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
.குழந்தைகளுக்கு பிடித்தமான சுற்றுலா பகுதிகளில்சீனாவின் தைசௌ பகுதியில் உயிரியல் பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. சீனா என்றாலே பாண்டா கரடிகள் ரொம்ப பிரபலம். அதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல உயிரியல் பூங்காக்களிலும் பாண்டா கரடிகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால் தௌசௌ பூங்காவில் பாண்டா கரடிகள் இல்லை.
இதை சமாளிப்பதற்காக சௌசௌ என்ற வகையை சேர்ந்த நாய்களுக்கு பாண்டா கரடி போலவே பெயிண்ட் அடித்து கூண்டுக்குள் வைத்து பார்வையாளர்களை ஏமாற்றியுள்ளனர். அதை பாண்டா கரடி என்றே நம்பி நாள்தோறும் பலரும் வந்து பார்த்து சென்ற நிலையில் சமீபத்தில் குட்டு அம்பலமாகியுள்ளது. அப்படியும் அந்த பாண்டா கரடி நாயை பார்க்க கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று சமாளித்துள்ளது பூங்கா நிர்வாகம்.
0
Leave a Reply