உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரைக்கீரை
ஆரைக்கீரைகுளிர்ச்சியை உண்டு பண்ணக்கூடியது.மழை மற்றும் குளிர் காலத்தில் தான் இந்த கீரை எங்கும் கிடைக்கும், கோடை காலத்தில் கிடைப்பது அரிது.
நீர் நிலைத்து நிற்கும் இடத்தில் செழித்து வளரும், கீரையின் ஒரே நரம்பின் உச்சியில், நான்கு இலைகளுடன் காணப்படும்.
பச்சை நிறத்துடன் மெல்லியதாகவும், வட்டமாக இருக்கும், சமைத்தால் புளிப்பு ருசியுள்ளதாக இருக்கும், இதற்கு புளியாரை என்று கூறுவார்கள்.
ஆரைக்கீரை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.
ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிடலாம், சாம்பார் அல்லது சின்ன வெங்காயம் சேர்த்து பொறியலாகவும் செய்யலாம்'.சிலருக்கு அடிக்கடி அதிக அளவில் சிறுநீர் இறங்கும், இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கட்டுப்பட்டு, சரியான அளவில் வெளியேறும்.
சிலருக்கு ரத்தத்தில் பித்தம் அதிகமாகி அமிலத்தன்மை ஏற்பட்டு பித்த கோளாறுகளை உண்டுபண்ணும், தொடர்ந்து இந்த கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த பிரமேகம் நோய் முற்றிலும் குணமாகும்.
பித்த கிறுகிறுப்பு, பித்த வாந்தி, தலைவலி போன்ற பித்த சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு.
இக்கீரையை உணவில் உட்கொண்டு வர, ரத்த போக்கும், வெள்ளைபாடு நிவர்த்தியாகும்.
0
Leave a Reply