கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்.
சிவகாசி, அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் விருதுநகர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை இணைந்து மத்திய, மாநில அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான "பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! " மூலம்"குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்" ஏற்பாடு செய்திருந்தனர்.கல்லூரியின் முதல்வர் முனைவர். அசோக் அவர்கள் துவங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. திலகம், அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த கருத்துரங்கில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியைச் சார்ந்த 1400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களை கல்லூரியின் விரிவுரையாளர் திரு. சேவர்கொடியோன் அவர்கள் வரவேற்று பேசினார். குழந்தை திருமணத்தை தடுத்திட சமூகத்தின் பங்கு என்ற தலைப்பில் மதுரை மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களும், குழந்தை திருமணங்கள், புகார்கள் அளிக்கும் வழிமுறைகள் உதவி எண்கள் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு, உறுப்பினர்திரு. ராஜா சக்திவேல், அவர்களும், குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விளைவுகள் என்ற தலைப்பில் வழக்கறிஞர். திருமதி. பாண்டீஸ்வரி அவர்களும்,குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடு என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளையின் இயக்குனர்வழக்கறிஞர். ராஜகோபால் அவர்களும் குழந்தை திருமணத்தின் சமூக, கல்வி மற்றும் சட்டப் பாதிப்புகளை விளக்கி, தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினர்.
மேலும் குழந்தை திருமணங்களை தடுக்கும் அரசு நடவடிக்கைகள், புகார் முறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும், குழந்தை திருமணத்தை தடுத்திட உளவியல் தலையீடுகள் மற்றும் குடும்ப ஆலோசனையின் முக்கியத்துவம், குழந்தை திருமணம் தடுத்திட சட்டப்பூர்வ விளக்கங்களையும், தடுப்பதில் மாணவ, மாணவிகளின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார்கள். இறுதியாக குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்து விளக்கி, மாணவர்களை சமூக மாற்றத்திற்கான தூதர்களாக உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் வந்து கொண்ட அனைவரும் “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற உறுதிமொழியை இணைந்து ஏற்றனர். இறுதியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களையும், மாணவ மாணவிகளுக்கும் கல்லூரியில் விரிவுரையாளர் திருமதி நளினா அவர்கள் நன்றி கூறினார்.
0
Leave a Reply