ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கூடை பந்து போட்டிகள்
ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கூடை பந்து போட்டிகள் மின்னொளி போட்ட களாக நடைபெறுகிறது.
கும்பகோணம், துாத்துக்குடி, திண்டுக்கல், சேலம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள், பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.JUNE 20 - 22 ,காலை, மாலை மூன்று நாட்கள் நடைபெறும் போட்டிகள் லீக், புள்ளி அடிப்படையில் நடைபெறுகின்றன. பள்ளியின் மேனேஜிங் டிரஸ்டி கிருஷ்ணம ராஜு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை செண்பகவள்ளி வரவேற்றார். ராஜபாளையம் டி.எஸ்.பி., பஸினா பீவி போட்டிகளை வைத்தார். துவக்கி வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
0
Leave a Reply