குக்கர் சாதம் உதிரி உதிரியாக வர...
முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்கறிகளை வாங்கும் போது நிறைய இலைகள் உள்ளதாகப் பார்த்து வாங்க வேண்டும்.நிறைய இலைகள் இருந்தால் அதில் நிறையப் புரதச் சத்து இருக்கும்.
பாகற்காயை நீளவாட்டில் துண்டு போட்டு வைத்தால் விதைகள் முழுவதும் கொட்டிவிடும். பின்னர் துண்டுகளாக நறுக்கி சமையல் செய்யலாம்.
கிர்ணி, வெள்ளரிப் பழங்களை மிதமான வெந்நீரில் இரண்டு நிமிடங்கள் போட்டு வைத்து பின்னர் எடுத்து உரித்தால் தோல் சுலபமாக வந்துவிடும்.
உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு. வாழைக்காய், பாகற்க்காய் ஆகியவற்றை சிப்ஸ் கட்டரில் சீவி விட்டு மோரில் உப்புப் போட்டு சேர்த்து பிறகு நன்றாக பிழிந்து காய்ந்த எண்ணெயில் பொரித்தால் மொறுமொறு என்று இருக்கும்.
குக்கரில் சாதம் வைக்கும் போது உதிரி உதிரியாக வருவதற்கு அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ் கட்டிகளை சேர்த்து ஊற வைத்து சமைத்தால் சாதம் வெள்ளையாகவும் உதிரி உதிரியாகவும் வரும்.
0
Leave a Reply