குளிர்ந்தது ராஜபாளையம் .6வது மைல் நீர் தேக்கத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து வருகிறது .
ராஜபாளையம் மலை அடிவார நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் மாவரசி அம்மன், முள்ளிக்கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில் நீர்வரத்துஅதிகரித்துள்ளது.
குடிநீர் தேவை கருதி , அய்யனார் கோயில் ஆற்றில் பெருகிய நீரை ,ராஜபாளையம் நகராட்சி குடிநீர் ஆதாரமாக உள்ள 6வது மைல் நீர் தேக்கத்திற்கு தடுப்பணை மூலம் திருப்பி விடப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக சில நேரம் தடுப்பணையைத் தாண்டி ஆற்றில் நீர் வழிந்து செல்கிறது. மழை தொடர்ந்தால் நகராட்சியின் 42 வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளைக்கு பிரச்னை இருக்காது, என நகராட்சி குடிநீர் சப்ளை அதிகாரிகள் மகிழ்ச்சி.
0
Leave a Reply