25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


கருணைக்கிழங்கு   சாகுபடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கருணைக்கிழங்கு  சாகுபடி

கருணைக்கிழங்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுள்600 க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் அதிகம் உள்ளது.இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய் வெள்ளைசிவப்பு,கருப்பு போன்ற நிறங்களிலும்,இனிப்பு முதல்,காரம், கசப்பு, கடுமையான புளிப்பு மற்றும் சுவை இல்லாத வகைகளும் உள்ளது. மேலும் உண்ணக்கூடிய மற்றும் விஷ தன்மை கொண்டவைகளும் உள்ளது.கருணைக்கிழகில் இரண்டு வகைகள் உள்ளதுகாரும் கருணைகாராக் கருணை என்று அழைக்கபடுகிறது . இந்த இரண்டு வகைகளும் உணவாக பயன் படுத்தப்  படுகிறது

ஜூன்,ஜூலைமற்றும்பிப்ரவரி,மார்ச்மாதங்கள்  சாகுபடிசெய்ய உகந்த மாதங்கள் முதலில் நிலத்தை நன்றாக உழுது,பின்வயலில்அரைஅடிக்குதண்ணீர்தேக்கி,தழைச்சத்தாக பசுந்தாள் பயிர்கள் சாகுபடிசெய்து அந்த செடியை மிதித்து மட்க செய்ய வேண்டும் .பின்பு ஒரு ஏக்கருக்கு ,   மக்கிய இலைகள், ஆடு ,எருமை , பசுமாட்டு சாணம் போன்றவற்றுடன் தொழு உரம் ஒரு டன் இட்டு, ஆழ புழுதி உழவு செய்து பரம்படிக்கும் போது நிலதிருக்கு தேவையான அடியுரம் கிடைக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நிலம் நல்ல முறையில் சாகுபடி செய்ய பண்பட மண் வளமுடன் இருக்கும் . 

ஒரு ஏக்கருக்கு30 முதல் 35 ஆயிரம் விதை கிழங்கு தேவை படும். இதனை வாங்கி, பாதுகாப்பாக ஈரமில்லாத, காற்று புகாத அறையில்வைத்து இருக்கவேண்டும்பின்பு விதை கிழங்குகளில் முளை கட்டியவுடன், நிலத்தில் அரை அடிக்கு ஒரு விதை கிழங்கு என்று நடவு செய்ய வேண்டும்.குறைவான நீர்பாசனவசதிகொண்டநிலங்களில்சொட்டுநீர் பாசனமுறை மூலம் பயிர் செய்யலாம்இந்த வகை நிலங்களுக்கு கருணை ஒரு மிக சிறந்த ஒன்றாகும்இது ஒன்பது மாதம் வயது கொண்ட பயிர் ஆகும் .இது பயிரிட்ட நாளில்  இருந்து ஒரு மாதம் கழித்து முளைகுருத்து நிலத்தில் தெரியும். இப்படி முளைக்கும் பருவத்தில் குறைந்தது 5 முதல் 6 நாட்கள் ஒருமுறை மன்ணின தன்மை பொருத்து நீர் பாசனம் செய்வது நன்மை பயக்கும். இப்படி மண்ணிண் ஈரப்பதம் காரணமாக களைகள் வரும் அதனை களை எடுத்து பராமரிக்கவேண்டும் .

ஒரு மாதத்திற்கு ஒரு முறை  ஐந்து மூட்டை, கடலை புண்ணாக்கு, மூன்று மூட்டை வேப்பம் புண்ணாக்கு இயற்கை உரம்  இடவேண்டும் இதன் காரணமா பயிருக்கு தேவையான  சத்துக்கள் நிலத்தில் அதிகரிக்கும். ,மண்புழு உரம்  கிடைத்தால் ஒவ்வொரு செடியின் வேர்  பகுதியில்  30 கிராம் வீதம் கொடுத்தல் நன்கு வளர்ச்சியில் மாற்றம்  தெரியும் . இதன் மூலம் கிழங்கின் அளவும் எடையும் அதிகரிக்கும் .இவ்வாறு கொடுக்கும் பொழுது  வேர்பகுதில் மண்ணை வெட்டிபின்பு மண் அணைக்க வேண்டும்9 மாதம் கடந்த பின்பு பக்குவம் பார்த்து அறுவடை செய்யலாம். இது குறிப்பாக ஒரு ஏக்கருக்கு 6 முதல் 7டன் வரை கிடைக்கும் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News