ஆழமான பசிபிக் பெருங்கடல்.
திடப்பொருட்களின் அடர்த்தி ததண்ணீரின்அடர்த்தியைவிட அதிகம் இருப்பதால்,அவை நீரில் இடும்போது மூழ்கிவிடுகின்றன. ஆனால் பனிக்கட்டி வெண்ணெய் போன்ற திடப்பொருள் மூழ்குவதில்லை.இவற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைவிடக் குறைவாக இருப்பதால், இவை மிதக்கின்றன. நீரின் மூலக்கூறு.(எச்2ஓ). இரண்டு ஹைட்ரஜன் அணு, ஒரு ஆக்சிஜன் அணுவால் ஆனது. இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் எலக்ட்ரான்களைச் சமமாக வழங்கி, சமமாகப் பகிர்ந்து கொள்கின்றன இதனால் பனிக்கட்டியின் அடர்த்தி குறைகிறது.
அமெரிக்காவின்டென்னிஸ்டிட்டோ. 1940 ஆக., 8ல் பிறந்த இவர் ஏரோநாட்டிகல் இன்ஜினியர் தொழிலதிபராக இருந்தவர். இவர் உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி என அழைக்கப்படுகிறார். இவர் 2001 ஏப்., 28ல் ரஷ்யாவின் 'சோயுஜ் டி.எம் 32 விண்கலம் மூலம், விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுற்றுலா சென்றார் ஏழு நாட்கள், 22 மணி, 4 நிமிடம் விண்வெளியில் தங்கியிருந்தார். இவர் தன் விண்வெளி பயணத்துக்காக ரூ.137 கோடி பயணக்கட்டணமாக செலுத்தினார் இதன்பின் பலர் சென்றுள்ளனர்.
ஐந்து பெருங்கடல்களில் பெரியது, ஆழமான பசிபிக் பெருங்கடல். இதன் பரப்பளவு 16.25 கோ சதுர கி.மீ. இதன் சராசரி ஆழம் 14,040 அடி. அதிகபட் ஆழம் 35,797 அடி. பூமியின் மொத்த நீர் பரப்பளவில் 46% இக்கடலில் உள்ளது. இக்கடலுக்கு பெயரிட்டவர் போர்ச்சுக்கலின் மெகல்லன். இவர் 1519ல் ஸ்பெயினில் இருந்து ஐந்து கப்பல்களில் 280 மாலுமிகளுடன் கிழக்கு நோக்கி பயணித்தார். ஒவ்வொரு பகுதியாக கண்டறிந்த இவர், அமெரிக்க கண்டத்துக்கு அப்பால் மேற்கே உள்ள கடலுக்கு 'பசிபிக் கடல்' என பெயர் வைத்தார்.
0
Leave a Reply