குந்தலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குந்தலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (26.6.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.மேலும், காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு பயன்படுத்தப்படும், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், முட்டைகளின் தரம் குறித்தும், மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் முட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 90 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கல்வி பயின்று வரும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், கற்பிக்கப்படும் முறை குறித்தும், கல்வி செய்பாடுகள் குறித்தும், மாணவர்களின் வருகைப் பதிவு குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் திரு.ஜே.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.ஜெகதீசன் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இருந்தனர்.
0
Leave a Reply