எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் சப்பாத்தி சாப்பிட்டா எடை குறையுமா?
எடை குறைக்க முயற்சி செய்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன், அரிசி சாப்பிடுவதைக் குறைப்பது உள்ளிட்ட பல காரணங்களின் அடிப்படையில், அரிசி சாதத்துக்கு பதிலாக சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும் என்ற கருத்து நிலவி வருகிறது அரிசியை ஒப்பிடும் போது, கலோரி அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும், சப்பாத்தியில் ஏன் எடை குறையும் என்பதற்கு முக்கிய காரணம் உள்ளது. சப்பாத்தியுடன் ஒப்பிடும் போது, அரிசி சாதம் சாப்பிடும் அளவு அதிகமாக இருக்கும். எனவே, அரிசிக்கு பதிலாக சப்பாத்தி எடை குறையும் என்ற கூற்று நிலவுகிறது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள்,அரிசியை குறைத்துக் கொள்ளவேண்டும், அதற்கு பதிலாகசப்பாத்தி சாப்பிடலாம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.இதற்குக் காரணம், சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும், சர்க்கரை அளவும் குறையும் என்ற கருத்து நிலவுகிறது. இது உண்மையா? அரிசியுடன் ஒப்பிடும் போது, சப்பாத்தியில் நார்ச்சத்து அதிகம் என்பது மட்டுமே பெரிய வித்தியாசம். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் என்பது இதில் உள்ள பெரிய நன்மை சப்பாத்தி சிலருக்கு வயிறு உப்பசம், வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே, தினமும் சப்பாத்தி சாப்பிடுவது எடை குறைக்க உதவுமா இல்லையா என்பதைத் தவிர்த்து, வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
தினமும்5+ சப்பாத்தி, சிக்கன் அல்லது உருளை மசாலா, கிரேவி, போன்றவற்றை சிட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் கண்டிப்பாக எடை குறையாது. அரிசி உணவைத் தவிர்த்து ஒரு வேளை சப்பாத்தி சாப்பிடுபவர்கள், புரதம் நிறைந்த உணவுகளை உடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.2,3 சப்பாத்தி, வேக வைத்த முட்டை அல்லது பயிறு வகை(கொண்டை கடலை, பச்சை பயிறு, மொச்சை, வேர்கடலை போன்றவை), போன்றவற்றை ஒரு வேளை உணவாக சாப்பிட்டால் உடல் எடை குறையத் துவங்கும்.எடை குறைக்க கோதுமைக்கு மாற்று கோதுமை சப்பாத்திக்கு பதிலாக, கேழ்வரகு, கம்பு, போன்றசிறுதானியங்களில்ரொட்டிசெய்துசாப்பிடுவது, உடலுக்கு கூடுதலாக சத்துக்களையும் கொடுக்கும், எடை குறைக்கவும் உதவும்.
0
Leave a Reply