மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா.
திருவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை, பெங்களூரூவை சார்ந்த எனேபில் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி ஆகியவை இணைந்து ஒன்றியம் கோபாலபுரம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகளை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான 10 நாட்கள் பயிற்சியை அளித்தது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோருக்கு தேவையான திறன்கள், பண்புகள் மற்றும் தொழில் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், விலை நிர்ணயம் செய்தல், சந்தை படுத்துதல், மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் தடைகள் மற்றும் சவால்களை, எதிர்கொள்ளும் விதம், தன்னம்பிக்கை வளர்த்தல், நிதி மேலாண்மை போன்ற பல கருத்துகள் வழங்கப்பட்டது.
நிறைவு விழாவுக்கு சைமா அறக்கட்டளையில் இயக்குனர் ராஜகோபால் அவர்கள் தலைமை வகித்தார். கள ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஒருங்கிணைப்பு செய்தார். இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 35 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்வில் பயிற்நுனர்கள் சுவேதா, எனேபில் இந்தியா திட்ட அலுவலர் சுப்புராஜ், வத்திராயிருப்பு லயன்ஸ் சங்கம் சார்பில் நிகழ்வில் மண்டலத் தலைவர் சுப்பையா , மாவட்ட தலைவர் ஆரியன் மதுரம், லயன்ஸ் செயலாளர் அறிவொளி முருகன் மற்றும் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தர்கள்.
0
Leave a Reply