ராஜபாளையத்தில் மக்காச்சோளம் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி ..
ஆயிரக்கணக்கான ஏக்கரில், ராஜபாளையம் அருகே கோபாலபுரம், வடகரை, நரிக்குளம், கலங்காபேரிபுதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரியாக மக்காச் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பயிரிடப்பட்ட நாளில் இருந்து போதுமான மழை இல்லாமல் இருந்தது. தற்போது கிணறுகளில் போதுமான அளவில் உள்ள தண்ணீரை மக்காச்சோளத்திற்கு பாய்ச்சி வருகின்றனர். இதன் காரணமாக பயிர்கள் நன்கு விளைந்து ,பல இடங்களில் மக்காச்சோளம் கதிர் வீட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சில இடங்களில் காட்டுப்பன்றிகள் தாக்குதல் இருந்தாலும் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
0
Leave a Reply