தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தும் வெந்தயம்
வெந்தயம்உடலுக்குள் சென்று முடி வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை தூண்டுகின்றன. இதனால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கின்றது.வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து பயன்படுத்தும் போது பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.இத்தனை அம்சங்கள் பொருந்திய வெந்தயத்தை எப்படி தலைமுடிக்கு அப்ளை செய்யலாம். 7 நாட்களுக்கு பின்னர் நிச்சயமாக உங்களின் தலைமுடி பிரச்சினைகள் சரியாகும்.
1. இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் ஒரு கப் அளவு வெந்தய விதைகளை எடுத்து பவுலில் போட்டு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
2. காலையில் எழுந்தவுடன் வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அந்த பேக்கை உச்சந்தலையில் மற்றும் முடியில் தடவி சரியாக30 நிமிடங்கள் வரை வைத்திருந்து விட்டு குளிக்கவும்.
3. வெந்தயப் பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டு பொருளை நன்றாக கலந்து தலைமுடிக்கு அப்ளை செய்ய வேண்டும்.1 மணித்திற்கு பின்னர் ஷாம்பூ கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும்.
4. மீண்டும் வெந்தயத்தை எடுத்து ஒரு கப்பில் ஊற வைக்க வேண்டும்.
5. ஊற வைத்த வெந்தயத்தை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அந்த சாற்றை எடுத்து குளித்து முடித்த பின்னர் தலைமுடியை அந்த தண்ணீரில் அலச வேண்டும்.
6. வெந்தயப் பொடி மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் கலந்து தலையில் பூசி சுமாராக 30 நிமிடங்கள் வரை வைத்து விட்டு நன்றாக அலசிக் கொள்ளவும்.
7. மீண்டும் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும்.3,4 வாரங்களுக்கு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை விரைவில் பார்க்கலாம். அத்துடன் தலைமுடி வளர்ச்சியும் அதிகமாகும்.
0
Leave a Reply