25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


உடல் சதை கரைய  வெந்தயக்கீரை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல் சதை கரைய வெந்தயக்கீரை

வெந்தயக் கீரையின் விதைகளின் கருவில் காலக்டோமன்னை காணப்படுகிறது. இளம் விதைகளில் கார்போஹைட்ரேட், சர்க்கரையும் முதிர்ந்த விதைகளில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் கரோட்டீன் வைட்டமின்கள், ஜெட்ரோஜெனின், ட்ரைகோனெல்லோசைட், ட்ரைகோனெல்லின், ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. வெந்தயக்கீரை மட்டுமல்ல, இந்த செடியின் விதைகள், தண்டுகள் என அனைத்துமே மருத்துவமும், மகத்துவமும் நிறைந்தவையாகும்.இந்த விதைகளும் நோயை தீர்க்கும். சிறுநீர் பெருக்கத்தை அதிகரிக்கும். குளிர்ச்சியை தரக்கூடியது.. அஜீரணத்தை நீக்கும்.. மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும்.. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயுக்கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ், ரத்தசோகை, நீரிழிவு நோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.

 நூறு கிராம் அளவு வெந்தயக்கீரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்தும், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது. இதில், வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகமாகவே உள்ளன.. அதனால், உடல் சோர்வாக உள்ளவர்கள் வெந்தயக்கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். கண்பார்வை: வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும். 
 நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த உணவாக இந்த கீரையை பயன்படுத்தலாம்.. தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். அதனால், நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து 40 நாட்களுக்கு இந்த கீரையை சாப்பிட்டாலே நீரிழிவு கட்டுப்படுமாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும், காச நோய் கோளாறு உள்ளவர்களுக்கும் சிறந்த தேர்வு.

இந்த கீரை.. கீரைகள்: கீரைகள் என்றாலே மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது என்றாலும், இந்த வெந்தயக்கீரையை, வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாப்பிட்டால், வயிறு சுத்தமாகும்.. குடல் புண்களும் குணமாகும்.. வெந்தயக்கீரையை வெண்ணையில் வதக்கி சாப்பிட்டால், வயிறு உப்பசம், பசியின்மை போன்ற வயிறு கோளாறுகள் நீங்கும்.. இந்த கீரையின் தண்டுகூட மருத்துவ குணம் கொண்டது.. வெந்தயக்கீரையின் தண்டை அரைத்து, மோருடன் கலந்து சாப்பிட்டு வந்தாலும், வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரும்.வெந்தயக்கீரையை நெய்யுடன் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை விரைவில் ஆறும். உடல் எடை: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, வெந்தயக்கீரை பெஸ்ட் சாய்ஸ்.... பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த கீரையை அடிக்கடி சமைத்து தந்தால், பால் உற்பத்தி பெருகும்.. அல்லது கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தந்தாலும் பால் சுரக்கும். இந்த வெந்தய விதைகளில், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை செய்யலாம் என்றாலும். வெந்தயத்தில் களி செய்யலாம்.. இந்த வெந்தயக்களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. இந்த கீரை குளிர்ச்சி என்பதால் முடி கொட்டுவதை தடுக்கிறது.. வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, நைசாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வதுநிற்கும்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News