நான்கு வழிச் சாலை ரயில்வே ஸ்டீல் ஆர்க் பிரிட்ஜ் பணிகள் வேகம் .
நான்கு வழிச்சாலையின் ராஜபாளையம் வழியே செல்லும் ரயில்வே மேம்பால பணிகளின் ஸ்டீல் ஆர்க் பணிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.முதல் கட்டமாக ராஜபாளையம் வரைதிருமங்கலம் கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்துள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்துார் சித்தாலம்புத்துார், ராஜபாளையம் முதுகுடி ரயில்வே லைனை கடக்கும் மேம்பால பணிகள் தாமதமாக தொடங்கியதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.
ரயில்வே மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணிகள் ராஜபாளையம் புது ஸ்டாண்ட் அடுத்துள்ள முதுகுடியில் முடிந்துள்ளது. தற்போது ரயில்வே லைன் இணைப்பிற்கு ஸ்டீல் ஆர்க் வெல்டு பணிகள் வேகமாக ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடையும். கிருஷ்ணன் கோவிலில் இருந்து ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் ,அடுத்து முதுகுடி வரையிலான நான்கு வழிச்சாலையில் தடையின்றி பயணிக்க முடியும். இதன் மூலம் இரண்டு நகர்ப்பகுதிகளிலும் ஏற்படும் நெரிசல் பெருமளவு குறையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply