பல் வலி தீர மாசிக்காய் தைலம்
பல் போனால் சொல் போச்சு என்பார்கள். முதலில் பல் வலியில் ஆரம்பித்து பின்பு பற்களையே இழக்க நேரிடும். இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மாசிக்காய் தீராத பல் வலி மற்றும் பல் அசைவு போன்ற பல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும். பல் பிணியை நீக்கும் மாசிக்காய்த் தைலம் தயாரிக்க
தேவையான மூலிகைகள் - மாசிக்காய் -5 கிராம் , கஸ்தூரி மஞ்சள் - 5 கிராம் , நல்லெண்ணெய் - 100 மிலி
மாசிக்காய், கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் நன்றாக இடித்து நல்லெண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி, எடுத்து வடிகட்டி வைத்துக்கொண்டு , பல் வலிக்கும், பல் அசைவுக்கும் பல் ஈறுகளிலும் தடவி வர தீரும்.
0
Leave a Reply