முள்ளங்கி தோல் மென்மையாக இருந்தால்
முள்ளங்கி லேசாககீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு நல்ல காய், .உருளை கிழங்கு முளை விடாமல் இருக்கனும் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்.
வெண்ணெயை முட்டையில் கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்தால் ருசியாக இருக்கும்.
அதிக தண்ணீர் வைத்து காய்கறிகளை வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின், மணம், சத்துகள் போய்விடும்.
மாவு அரைக்கும் போது இரண்டு மூன்று வெண்டை காய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக் கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.
பொரித்த ஒரு அப்பளத்தை நொறுக்கி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கறி வேப்பிலை, புளி, ஒன்றிரண்டு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். அசத்தலான அப்பளத் துவையல் ரெடி.
0
Leave a Reply