25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்தியாவின் ஹம்பி உலக கோப்பை செஸ் தொடரில்  வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் ஹம்பி உலக கோப்பை செஸ் தொடரில்  வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஜார்ஜியாவில் பெண் களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக் கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா வெற்றி பெற்றனர். இதையடுத்து முதன் முறையாக இந்தியாவின் நான்கு வீராங்கனைகள், உலக கோப்பை தொடரின் காலிறுதிக்கு முன்னேறி, வரலாறு படைத்தனர். 

நேற்றுகாலிறுதிசுற்றுதுவங்கின.நடக்கும்இருபோட்டியில்.நேற்றுநடந்தமுதல்போட்டியில்இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை, உலகின் 'நம்பர்-5', கோனேரு ஹம்பி, சீனாவின் யூஜின் சாங் ('நம்பர் -36') மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி துவக்கத்தில் இருந்து ,சிறப்பாக செயல்பட்டு 53வதுநகர்த்தலில் வெற்றி பெற்றார்..இவர் 1.0-0 என முன்னிலையில் உள்ளார்.. நேற்று 2வது போட்டி நடந்தது. இதில் ஹம்பி, கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறு விறுப்பான இப்போட்டி 53வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் ஹம்பி1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஹரிகா, திவ்யா தேஷ்முக் மோதி னர். முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் 60வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முடிவில் போட்டி 1.0 - 1.0என சமநிலையில்  உள்ளது. இன்று 'டை பிரேக்கர்' நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறலாம்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *