ராஜபாளையம் சுற்று பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்
ராஜபாளையத்தை அடுத்து தேவதானம் சாஸ்தா கோயில் நீர்த்தேக் கத்தை அடிப்படையாகக் கொண்டு நகர குளம், பெரியகுளம், வாண்டையார் குளம், சேர்வராயன்குளம் உள்ளிட்ட பாசன பகுதியில் மூலம்3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெல் பாசன விவசாயம் நடை பெறுகிறது. தற்போது2ம் போக சாகுபடிக்கான அறு வடை தீவிரமடைந்து வந்த நிலையில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இப்பகுதியில் நான்கு இடங்களில் திறக்கப்பட்டன.ராஜபாளையம் சுற்று பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழையால் அறுவடை பணிகள் முடங்கி இருந்த நிலையில் மீண்டும் துவங்கியது. அறுவடை இயந்திரம் வாடகை குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அறுவடை பணிகள் மீண்டும் துவங்கியது. மதுரை, சோழ வந்தான், டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இயந்திரங்கள் குவிந்து வருவதால் ஒரு மணி நேரம் அறுவடைக்கான வாடகை பெல்ட் வண்டிக்கு கடந்த அறுவடையை விட ரூ.500 குறைந்து2,500ம், டயர் வண்டிக்கு2 ஆயிரத்தில் இருந்து,1,700க்கு- குறைந்துள்ளது.மணிக்கு ரூ.500 வரை மீதமாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
0
Leave a Reply