ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில் இலக்கிய மன்றம் நிறைவு விழா
ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா நடந்தது.டாக்டர் கு. கணேசன்பள்ளி ஆலோசகர் தலைமையில். மாணவி சிவஸ்ரீ வரவேற்றார். புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து, மாணவி ஹரி விசாலினி பேசினார் "சிறகை விரிப்போம்" என்ற தலைப்பில் சாகித்திய அகாடமி விருதாளர் ஆயிஷா ஆர். நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவிகள் கவிசேனா, ஹன்சிகா தொகுத்து வழங்க, ஏற்பாடுகளை முதல்வர் சுதா தலைமையில் விளையாட்டுத்துறை இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் நிர்வாகி ராமராஜ், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர். மாணவர் விஸ்வ ரோஹித் நன்றி கூறினார்.
0
Leave a Reply