25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படம் ‘பென்ஸ்’
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படம் ‘பென்ஸ்’

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் இருந்து ரத்னகுமார் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ரெமோ பட இயக்குனர்.பாக்கியராஜ் கண்ணன் கமிட் ஆகி உள்ளார்.கோலிவுட்டில் டிமாண்ட் உள்ள இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். இதற்கு காரணம் இவரது படங்கள் தான். மாநகரம் படத்தில் தொடங்கிய இவரது பயணம், பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக ஐந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுடன் சக்சஸ்புல் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது கால்ஷீட்டுக்காக தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளில் இருந்து தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களின் ஸ்கிரிப்ட் பணிகளில் மற்ற இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களில் அவருடன் ஸ்கிரிப்ட் பணிகளில் இயக்குனர் ரத்னகுமார் ஈடுபட்டு வந்தார். அவரே தலைவர்171 படத்திலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படத்தில் ரத்ன குமார் இடம்பெறவில்லை என்பதை லோகேஷ் கனகராஜே பேட்டிகளில் கூறி இருந்தார்.

அதற்கு காரணம், ரத்னகுமார் தன்னுடைய தயாரிப்பில் படம் பண்ண உள்ளதாகவும் கூறி இருந்தார்அப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. அப்படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையது என்றும் சொல்லப்பட்டது. அப்படி அனைவரும் எதிர்பார்த்தபடியே லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ் புத்தாண்டு தினமான இன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி அப்படத்திற்கு பென்ஸ் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளன. இப்படத்தை ரத்னகுமார் இயக்கவில்லை என்பது தான். அவருக்கு பதிலாக பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்க உள்ளதாக போஸ்டரில் குறிப்பிட்டு உள்ளனர். இவர் சிவகார்த்திகேயனின் ரெமோ, கார்த்தி நடித்த சுல்தான் போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தில் இருந்து ரத்னகுமார் ஏன் நீக்கப்பட்டார், அவருக்கும் லோகேஷுக்கு சண்டையா என்பது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News