முன்னோர்கள் பயன்படுத்திய வேப்பிலை
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமரிப்புப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது.
முகப்பரு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டு வரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூச வேண்டும்.இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.இதன்மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.
பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணெய்யை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.
0
Leave a Reply