நாவல்பழ சூப்
தேவையான பொருட்கள்: நாவல்பழம் 2 டம்ளர், நல்லெண்ணெய் 3 ஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, சாம்பார் பொடி 1 ஸ்பூன், உப்பு அரை ஸ்பூன், சர்க்கரை 5 ஸ்பூன், தயிர் அரை டம்ளர்,
செய்முறை: நாவல்பழங்களை தண்ணீரில் அலசிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை தாளிதம் செய்து, நாவல்பழங்களைப் போட்டு வேகவைக்கவும்.அதில் உப்பு,சாம்பார் பொடி, சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுக் கலக்கி, அத்துடன் தயிர் ஊற்றிக் கலக்கி, லேசாகக் கிளறி விடவும்.நாவல்பழங்கள்10 நிமிடங்கள் கொட்டை தனியாக பிரியுமாறு வெந்தவுடன் இறக்கி வைக்க வும். கோப்பைகளில் ஊற்றி ஸ்பூன் போட்டு பரிமாறவும்.
குறிப்பு:நாவல்பழ கொட்டைகளை அலசி வெயிலில் காயவைத்து, இடித்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.
0
Leave a Reply