25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அதீதமாக சிந்திப்பது பிரச்னைகளை உண்டுபண்ணும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதீதமாக சிந்திப்பது பிரச்னைகளை உண்டுபண்ணும்.

வர் திங்கிங் உடம்புக்கு ஆகாது.. இந்த ஓவர் திங்கிங் என்பதை மருத்துவத்தில்,‘ரூமினேஷன்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஒருவர் தனக்கு நடந்ததை பற்றியே திருப்பித் திருப்பி நினைத்துப் பார்த்து அசைபோட்டுக் கொண்டிருப்பது அவர்களை மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும். இவர்களுக்கு நிகழ்காலத்தைப் பற்றிய உணர்வு இல்லாமல் இருப்பதுடன் மன அழுத்தம் எனப்படும் டிப்ரெஷன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படி முடிந்து போன விஷயங்களை பற்றி அதிகமாக சிந்திப்பதால் ஒரு பயனும் இல்லை.நமக்குப் பிடித்த விஷயங்களை சிந்திக்கும்போது மனம் லேசாகும். தேவையில்லாத விஷயங்களை சிந்திப்பதும், கடந்த கால வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளைப் பற்றி சிந்திப்பதும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை உண்டுபண்ணும்.

சிந்திப்பது என்பது ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு தீர யோசிப்பது. அதாவது எதனையும் சிந்தித்து செயல்படுவது. அதீதமாக யோசிப்பது என்பது தேவையில்லாத வேலை. எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு பலமுறை சிந்தித்து முடிவெடுத்து செய்வதால் அந்த செயல் நாம் நினைத்தபடியே வெற்றிகரமாக முடியும்.  அதுவே ஒரு செயலை செய்வதற்கு முன் நாம் அதிகம் யோசித்தால் மன அழுத்தம், தேவையில்லாத பதற்றம் போன்றவை உண்டாகும். இதனால் இரவில் தூக்கம் கெடும். உடல்நிலை கூட பாதிக்கப்படும்.மனிதர்களைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு மூளையில்12 ஆயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன என்று சொல்லப்படுகிறது. எண்ணங்கள் வாழ்க்கைக்கு அவசியம். அவை நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் திறன் கொண்டவை. ஆனால், அந்த எண்ணங்கள் (சிந்தனைகள்) நம் நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள விஷயங்களாக இருக்க வேண்டும்.எண்ணங்களே வார்த்தைகளாகி, செயல்களாக மாறி நம்மை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கிறது. எனவே. நாம் சிந்திக்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளலாமல் இருக்க பழக வேண்டும்.

இதற்கு நடைப்பயிற்சி நல்ல பலன் தரும். காலை அல்லது மாலையில் மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழலில் நடப்பது நம் மனதை லேசாக்கும்.உடலை அதிகம் வருத்திக்கொள்ளாமல் எளிதான உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்வது உடல் நலத்துடன் மனநலத்தையும் பாதுகாக்கும்.அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து மூச்சைஇழுத்துவெளியேவிட்டுநம் சுவாசத்தை கவனித்து பழகுதல் சிறந்தது. அத்துடன் நம் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வதால் தேவையில்லாத எண்ணங்கள், யோசனைகள் மனதில் தோன்றாது. தேவையில்லாத எண்ணங்கள் தோன்றாததால் மனதில் குழப்பமும் உண்டாகாது. மனம் தெளிவாக இருந்தால் எந்த முடிவையும் குழப்பம் இல்லாமல் எடுக்க முடியும்..மனதில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றும்போது அதில் இருந்து விடுபட, வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவது, நண்பர்களுடன் உரையாடுவது, புது நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வது, புது சூழலில் நம்மை இருத்திக் கொள்வது, மனதுக்கு மகிழ்ச்சி தரும் பாடல்களை கேட்பது என நம் மனதை ஒருமுகப்படுத்தி அதீத யோசனை எனப்படும் ஓவர் திங்கிங்கிலிருந்து வெளிவரலாம்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News