25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவராலும் மிகவும் விரும்பப்பட கூடிய காய்கறி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவராலும் மிகவும் விரும்பப்பட கூடிய காய்கறி

உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவராலும் மிகவும் விரும்பப்பட கூடிய காய்கறி இதை அவரவர் விருப்பத்திற்கேற்ப பல வழிகளில் சமைத்து சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகள் முழுவதுமாக நிரம்பி இருக்கின்றன.உருளைக்கிழங்கு உங்கள் சரும பராமரிப்புக்கு பெரிதும் உதவுகின்றன. சரும நிறத்தை வெண்மையாக மாற்றுவதிலிருந்து உடல் ஆரோக்கியம் வரை உருளைக்கிழங்கில் பல சிறந்த நன்மைகள் இருக்கின்றன. 
உருளைக்கிழங்கு அதிக மாவுச்சத்து நிறைந்த வேர் காய்கறி. இதில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்களின்மூலமாகதிகழ்கிறது

கார்போஹைட்ரேட்டு என்றவுடன் உடல் எடையை அதிகரிக்கும் என தவிர்க்கும் மக்களும் அதிகரித்திருக்கிறார்கள். உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரம் என்பது உண்மை தான், ஆனால் அவை உடலுக்கு தேவையான ஆற்றலின் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. அனைத்து ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு முக்கியம் என்பதால் இதை தவிர்ப்பது தவறு. அளவோடு உணவில் சேர்த்து கொள்வது நன்மை பயக்கும். நார்ச்சத்து உருளைக்கிழங்கும் நார்ச்சத்துகளின் நல்ல மூலமாக இருப்பதால், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது இதய நோய், பக்கவாதம், வகை 2 நீரிழிவு மற்றும் குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை குறைப்பதில் தொடர்புடையது.


உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி9 (ஃபோலேட்) உள்ளிட்ட பல வைட்டமின்களின் நல்ல ஆதாரமாக விளங்குவதோடு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல தாதுக்களின் சிறந்த மூலமாக திகழ்கிறது. நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவுதல், காயங்களை குணப்படுத்துதல், எலும்புகளை வலிமையாக்குதல் மற்றும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல், போன்ற உடல் செயல்பாடுகளுக்கு அவசியமாகின்றன. செல்கள் மற்றும் உறுப்புகள் அவற்றின் வேலையைச் செய்ய உதவுகின்றன. உருளைக்கிழங்கில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் உட்பட பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும்.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் செல்களில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்து, ஆக்ஸிஜனேற்றத்தால் ஏற்படும் சேதத்தைத் தடுப்பது அல்லது குறைப்பது போன்ற செயல்பாடுகளை செய்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News