ராஜபாளையம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ராஜபாளையம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், கருப்பஞானியார் கோவில், அருணாச்சலேசுவரர் கோவில், அம்பலப்புளி பஜார் பகுதியில் உள்ள குருசாமி கோவில், சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள பறவை அன்னம் காத்தருளியசாமி கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நந்தீஸ்வரருக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதேபோல சேத்தூர் திருக்கண்ணிஸ்வரர் கோவில், சொக்கநாதன்புத்தூர், தவநந்திகண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்த ருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், வடகரை கிராமத்தில் சங்கிலி சித்தன் அய்யனார் கோவிலில் உள்ள நந்தீஸ்வரர் சுவாமி. தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில், அயன் கொல்லங்கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில், இளந்திரை கொண்டான் காலாஹஸ்தீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில் களில் பிரதோஷம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
0
Leave a Reply