கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா.
ராஜபாளையம் புதுப்பாளையம் சிங்கராஜா கோட்டை பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தினமும் சிம்மம், கருட, சேஷ, குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 3-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிங்கராஜா கோட்டை தலைவர் ராம் சிங், கோவில் தர்மகர்த்தா சீனிவாசராஜா மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.
0
Leave a Reply