.'ப்ரைனொசோமா” ( கொம்பு பல்லி )
ஊர்வனவகைஅமெரிக்காவில்வாழும்தனித்துவமுள்ளவிலங்கினம்கொம்புபல்லி.ஆங்கிலத்தில்இதன்அறிவியல்பெயர்.'ப்ரைனொசோமாஎன்பதாகும்.வட அமெரிக்காவில் மெக்சிகோ, கனடா பாலைவன புல்வெளி பகுதிகளில்அதிகம் காணப்படுகிறது. இதன் தற்காப்பு நடைமுறைகள் மிகவும் உடல் அமைப்பு, நடத்தை வித்தியாசமானது.
இதன் தலை மற்றும் உடல் பகுதியில் கொம்பு போன்ற முட்கள் நிறைந்து உள்ளன. இதன் உதவியால் பாறை மற்றும் மண்ணுடன் ஒன்றி மறைந்து வாழ்கிறது. எதிரியின் பார்வையில் இருந்து தப்புகிறது.இதன் உடல், பரந்து, தட்டையாக இருக்கும்; சூழலுக்கு ஏற்ப உடல் நிறத்தை மாற்றும் திறன் உடையது. முதன்மை உணவாக எறும்புகளையும், பூச்சிகளையும் உண்ணும்.
இதன் கண்களுக்கு அருகில் நுண்ணிய ரத்த நாளங்கள் உள்ளன. இதை பயன்படுத்தி எதிரி மீது ரத்தத்தைப் பீய்ச்சி அடிக்கும். அந்த ரத்தம் கசப்பு சுவையுடன் இருக்கும். இதை கண்டு பூனை, நாய் போன்ற இதன் எதிரி விலங்குகள் திகைத்து ஓடிவிடும். உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பு நடைமுறையாக இதை பின்பற்றுகிறது கொம்பு பல்லி.
முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினம் இது. பாலைவனத்தில் தட்ப வெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப, உடல் வெப்பத்தை அமைத்து கொள்ளும். குளிர்காலத்தில் உறக்க நிலைக்கு சென்று விடும். சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதற்கு ஏற்ப வாழ்வை அமைத்து கொள்ளும்.காடு அழிப்பு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பட்டால் கொம்பு பல்லி இனம் உலகில் குறைந்து வருகிறது. இந்த விலங்கினத்தை பாதுகாப்பது நம் கடமை.
0
Leave a Reply