ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி.
ராஜபாளையம் சஞ்சீவிமலை முருகன், அம்பல புலி பஜார் சுப்பிரமணியர் கோயில், மழை முந்தல் விநாயகர் கோயில், சொக்கர் கோவில் சேத்தூர் திருக்கண்ணீஸ்வரர் கோயில், தேவதானம் நச்சாடை தவிர்த்து அருளிய நாதர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வழிபாடு நடந்தது.
மாயூரநாத சுவாமி கோயிலில் வள்ளி, முருகன், தெய்வானை சுவா மிகளுக்கு மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. மூலவருக்கு அபிஷே கங்களுடன் யாக பூஜை நடந்தது.
மணமகன், மணமகள் அழைப்புக்கு பின் அம்மன் சுவாமிக்கு மாலை மாற்றப்பட்டு கன்னிகாதானம் செய்யப்பட்டது.
வேத விற்பன்னர்கள் மந்திரம் வாசிக்க , திருக்கல்யாணம் நடந்தது.
மகா தீபாராதனை ,அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
0
Leave a Reply