நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.
ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான சாலை விரிவாக்க பணிக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சாலையோர மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து சப்கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டில் அடிக்கடி விபத்து உயிர் பலி ராஜபாளையம் திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்டு வருகிறது. இதில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு, பாதாள சாக்கடை குழாய் களில் ஏற்படும் கசிவு போன்றவைகளால் சாலை சேதம் ஆகி காணப்படுகிறது.
சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக புதிதாக சாலைப் பணிகளை மேற்கொள்வதுடன் சாலையை விரிவாக்கம் செய்ய பரிந்துரையின் பேரில் நெடுஞ்சாலை துறை சார்பில் விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0
Leave a Reply