தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் .
தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகள் பாதிப்பு ஏற்படுத்தி வருவதால் விலை அதிகரித்தும் ,பலனின்றி வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
27 ஆயிரம்ஏக்கர்தென்னைசாகுபடி ,விருதுநகர் மாவட்டத்தில்மேற்குதொடர்ச்சிமலையைஒட்டியராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள், சமீப காலமாக அதிகரித்து பரவ தொடங்கியது. இவற்றிற்கு சுலபமாக பரவுவதற்கு வறட்சிக் காலம் வழி வகுத்ததுடன் ,வெள்ளை நிற ஈக்களின் குஞ்சுகள் இலைகளுக்கு பின்னால் ஒட்டியிருந்து சாறு உறிஞ்சுகிறது.
மரங்களின் வளர்ச்சியை பாதித்ததோடு, விளைச்சலும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது ..உழவு, உரம், பராமரிப்பு செலவு என சாகுபடி செலவு அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் விலை அதிகரித்தும் விளைச்சல் குறைந்ததால் அதன் பலன் முழுமையாக விவசாயிகளை சென்று சேரவில்லை. ஒரு சில விவசாயிகள் தடுப்பு. முறைகளை முறையாக கையாண்டும் மற்ற பகுதிகளில் இருந்து மீண்டும் பரவுவதால் இதை கட்டுப் படுத்தும் வழிமுறை தெரியாமல் பாதித்து வருகின்றனர்
0
Leave a Reply