25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி

இசை உலகையே மிரள வைத்த பாடகர் எஸ்.ஜானகிதான்.. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 17 மொழிகளில் 48,000 பாடல்களை பாடியுள்ள தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்படும் எஸ்.ஜானகிதான்.இளையராஜா போன்ற பெரும் இசையமைப்பாளர்களே பல முறை தனது பாடல்களை பாட எஸ். ஜானகியை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதை ஜானகியே பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.பொதுவாகவே பாடகர்களுக்கு திரையில் தோன்றும் நடிகர்களை போல பின்பற்றி பாடும் திறன் இருக்கும். இதில் பாடகர் பாலசுப்ரமணியம் நடிகர்களை அப்படியே பிரதிபலிப்பது போல பாடுவார். அதே போல் ஜானகியும் திரையில் தோன்றும் நடிகர்களுக்கு ஏற்றவாறே சிறப்பாக பாடுவார். அதனால்தான் தனிப்பாடல், இருவர் பாடல், குழு பாடல், தாலாட்டு என எதுவாக இருந்தாலும் அவரால் சிறப்பாக பாட முடிகிறது.இதுவே அவருக்கு2 வயது குழந்தையை போலவும்,20 வயது இளம்பெண்ணை போலவும்,60 வயது முதியவரை போலவும் பாட உதவுகிறது.அப்படி அவர் பாடிய பாடல்களுக்கு எத்தனையோ உதாரணம் கூறலாம்.இரண்டு வயது குழந்தை போல் பாடும் பாடலுக்கு உதாரணமாய்,'கண்ணா நீ எங்கே, வா வா நீ இங்கே' என்ற பாடலை கூறலாம்.இளம்பெண்ணை போல்'காதலின் தீபம் ஒன்று' பாடலை பாடியிருப்பார்.தனது இளம் வயதிலேயே1979 ஆம் ஆண்டில் வெளியான உதிரிப்பூக்கள் படத்தில்‘போடா போடா பொக்கை’ என்ற பாடலை முதியவர் குரலிலும் பாடியிருப்பார் எஸ். ஜானகி.இப்படி தனது வசீகர குரலால் அவர்48000த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.அதுமட்டுமின்றி சிறந்த பாடகிக்கான தேசிய விருதை இதுவரை நான்கு முறை வென்றுள்ளார்.

  • 1977 - செந்தூரப் பூவே என்ற தமிழ் பாடல்
  • 1981 - எட்டுமானூரம்பலத்தில் என்ற மலையாளப் பாடல்
  • 1984 - வெண்ணெல்லோ கோதாரி அந்தம் என்ற தெலுங்குப் பாடல்
  • 1992 - இஞ்சி இடுப்பழகா என்ற தமிழ் பாடல்

தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட அரசுகளிடமிருந்து இதுவரை32 விருதுகளை வாங்கியுள்ளார் இவர்.மைசூர் பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும்2013ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், ஜானகி தன்னுடைய ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரமே போதும் என்று கூறி அதை நிராகரித்து விட்டார்.கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் தனது இசை மூலம் இடம்பிடித்த எஸ்.ஜானகியின் இசை வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பதை நாம் தெரிந்து கொண்டாலே அவரின் உழைப்பு என்ன என்பது புரிந்து விடும்.ஜானகியின் முழு பெயர் சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி. அவரது தந்தை சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி மற்றும் தாய் சத்யவதி. குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற கிராமத்தில் தான்1938ஆம் ஆண்டில் ஜானகி பிறந்தார்.அவர் சிறு வயதில் இருந்து எந்த விதமான பாடலையும் பாடும் திறன் கொண்டவராக இருந்துள்ளார். அவர் இயல்பிலேயே எந்த ஒரு விஷயத்தையும் ‘போலச் செய்தல்’ திறன் கொண்டவர்.

தனது தந்தையின் ஆசிரியர் வேலை காரணமாக கரீம்நகர் அருகே உள்ள சிரிசில்லாவில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார் ஜானகி. அப்போதே இவர் சிறப்பாக சினிமா பாடல்களை பாடியதால், பலரும் இவரை பாட சொல்லிக் கேட்பார்களாம். குறிப்பாக இவரது சகோதரிகளும் நன்றாக பாடக் கூடியவர்கள்.இவர்களது குடும்பம் ராஜமுந்திரியில் இருந்தபோது, நாதஸ்வர வித்வான் கடவல்லி பைடிசுவாமியின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஜானகி ஒரு ஆண்டு இசை பயின்றார்.அவர் நேரடியாக இவருக்கு தியாகராஜ கீர்த்தனையை கற்றுக் கொடுத்துள்ளார்.ஒரு வருட இசைப்பயிற்சிக்கு பிறகு ஜானகி அந்த வகுப்புக்கு செல்லவில்லை. தனக்கு கர்நாடக இசையின் மீது ஆர்வம் இல்லை என்று கூறிய ஜானகி, இந்தி மற்றும் தெலுங்கு பாடல்களை சிறப்பாக பாடுவார்.லதா மங்கேஷ்கர் தான் இந்தி இசையில் தனக்கு குரு என்று ஜானகி கூறியுள்ளார். லதா பாடும் பாணி தன்னை கவர்ந்ததாகவும், அவரது பாடலான ராசிக் பல்மா பாடலை தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கண்டசாலா, லீலா, சுசீலா ஆகியோரின் பாடல்களையும் அவர் விரும்பி பாடுவாராம்.

தனது தந்தை இறந்த பிறகு ஜானகி தன்னுடைய சகோதரர்களுடன் ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார்.இவரது மைத்துனரான கரிமெல்லா நரசிம்ம ராவ் ஒரு சிறந்த இசைக்கலைஞர். அவரது மகன் கரிமெல்லா பாலகிருஷ்ண பிரசாத்தும் குறிப்பிடத்தகுந்த இசைக்கலைஞர் ஆவார்.தன் மைத்துனருடன் சேர்ந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வந்த ஜானகியின் திறமை டாக்டர் சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. இவர் ஒரு மிமிக்ரி கலைஞர். இவர்தான் ஜானகிக்கு ஏவிஎம் செல்ல சொல்லி சிபாரிசுக் கடிதம் வழங்கியது.அங்கு சென்று ஜானகி தனது குரல் வளமையை காட்டிய உடனேயே அவரை பாடகராக பணியமர்த்திக் கொண்டனர்.அப்படி ஜானகி முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில்"விதியுடன் விளையாட்டு" என்ற தமிழ் திரைப்படத்திற்காக பாடினார். டி சலபதி ராவ் இயக்கத்தில் பாடிய இந்தப் பாடல், படம் வெளியாகாததால் வெளியே வரவில்லை.அதன்பிறகு, அதே ஆண்டில் திலக் இயக்கிய"எம்.எல்.ஏ" என்ற தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு ஜானகிக்கு கிடைத்தது. இதில் பெண்டியாலாவின் இயக்கத்தில், கண்டசாலாவுடன் இணைந்து ஒரு பாடலை பாடினார் இவர்.பெயர் வாங்கிக் கொடுத்த பாடல்அதையடுத்து இவரை பிரபலமாக்கிய பாடல் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இயக்கிய சிங்கார வேலனே தேவா படத்தில்'சிங்கார வேலனே தேவா' என்ற பாடல்.அதில் நாதஸ்வரம் வாசித்த காரைக்குருறிச்சி அருணாச்சலம் தனக்கு போட்டியாக பாடல் பாட யாராவது இருக்கிறார்களா என்று சவால் விட்டார். இதனால் இந்த பாடலுக்காக லதா மங்கேஷ்கரையும் கூட அணுகியுள்ளார்கள்.

ஆனால் இறுதியில் இந்த பாடலை ஜானகிதான் பாடினார். இந்த பாடலில் அவர் பாடுகையில் அவரது குரலும், நாதஸ்வரத்தின் இசையும் ஒன்றுபோல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தெலுங்கிலும்"நீலிலா படேடா தேவா" என்று இதே பாடலை அவரே பாடினார்.அப்போதிருந்து இசை உலகில் அவரது பயணம் உச்சத்திற்கு சென்றது.1957 முதல்2016 வரை பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ் ஜானகி,2016 முதல் தான் பாடுவதை நிறுத்துவதாக அறிவித்து விட்டார்.பாடகி ஜானகி ​​டாக்டர் சந்திரசேகரின் மகன் வி.ராமபிரசாத்தை திருமணம் செய்து கொண்டார். அவர்1990 ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இவர்களுக்கு முரளிகிருஷ்ணா என்ற ஒரு மகன் உள்ளார்.உண்மையில் அவர் பேசுவது அவ்வளவு நேர்மையானதாகவும், சுத்தமானதாகவும் இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News