ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை.
ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் மாலை முதல் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, சங்கரன்கோவில் முக்கு, மாரியம்மன் கோயில்பஸ்ஸ்டாப்உள்ளிட்டபகுதிகளில்முதியோர், சிறுவர்கள், பெண்கள் என 40க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு உள்ளாகினர்.
22 JAN மட்டும் 39 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ளனர்.கடிபட்ட 32 நபர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும், பாதிப்பு அதிகம் உள்ள ஏழு பேருக்கு இமினோ குளோபிலின் மருந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.ஒரே நாளில் பாதிப்பு அதிகமானவுடன் மாவட்ட மருத்துவ துறைக்கு தகவல் அளித்து சுகாதார துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
0
Leave a Reply