25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


ராஜபாளையம் பகுதியில் பலத்த காற்று தென்னை, வாழை மரங்கள் பாதிப்பு , மின் இணைப்பு துண்டிப்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் பகுதியில் பலத்த காற்று தென்னை, வாழை மரங்கள் பாதிப்பு , மின் இணைப்பு துண்டிப்பு .

மலைப்பகுதியில் இருந்து பலத்த சூறைக்காற்று சேத்துார், தேவதானம் ராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே பல பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜபாளையம், சேத்துார், தேவதானம், கோவிலுார் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.

பல இடங்களிலும் முதிர்ந்த மரங்கள் பக்க வாட்டு கிளைகள் உடைந் துள்ளதுடன், வாழை விவசாயிகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளனர். தென்னை மரங்களில் இளம் மட்டைகள் முறிந்தும், இளநீர் காய்கள், மா மரங்களில் எஞ்சியுள்ள காய்கள் காற்றை எதிர்கொள்ள முடியாமல் சேதமடைந்துள்ளன.

விவசாய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பிகள் அறுந்து இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.ஆட்கள் பற்றாக்குறையை காரணம் கூறி மின் வாரியத்தினரும் முன்னுரிமை பகுதியில் பணிகளை செய்து வருவதால் தாமதம் ஏற்படுகிறது. தேங்காய்க்கு நல்ல விலை இருந்தும் இளநீர் பருவத்தில் உதிர்ந்ததால் தென்னை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது

ராஜபாளையம் சுற்று வட்டாரத்தில் கடந்த மூன்று நாட்களாக அடிக்கும் பலத்த காற்றில் தென்னை சாகுபடி பயிர்கள் பாதிப்பிற்கு உள்ளானதுடன் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பிற்கு உள்ளானதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News