தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவினை முன்னிட்டு சுவாமி,வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குகாட்சி அளித்தார்.தொடர்ந்து மூலவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.தொடர்ந்து நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற் றது. நாளை தேரோட்ட நிகழ்ச்சி நடக் கின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
ராஜபாளையம் செவல்பட்டி தெருவில் உள்ள ராஜகணபதி பாலமுருகன் கோவில், மொட்டமலை பாலதண்டா யுதபாணி கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. வத்திராயிருப்பு காசி விசுவநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், விரு துநகர் அருகே எல்லிங்கநாயக்கன் பட்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆமத்தூர் திருச்செந்திலாண்டவர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக - நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
0
Leave a Reply