25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


ராஜபாளையம் தென்றல் நகர் பகுதிக்கு 14 ஆண்டுகளுக்கு பின் மினி பஸ் வசதி தொடங்கியுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் தென்றல் நகர் பகுதிக்கு 14 ஆண்டுகளுக்கு பின் மினி பஸ் வசதி தொடங்கியுள்ளது.

ஆட்டோவை மட்டும் நம்பி, அதிக கட்டணத்துடன் தனியார் வாகனம், இப்பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை, சென்று வந்தனர். பல்வேறு அரசியல் காரணங்களால் 2011 வரை இயங்கி வந்த மினி பஸ் தடைப்பட்டது.மக்கள் பயன்பாட்டிற்காக மினி பஸ் இயக்க தொடர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், பஞ்சு மார்க்கெட், தாலுகா அலுவலகம் வழியாக சமத்துவபுரம் மற்றும் ராஜூக்கள் கல்லுாரிக்கு மினி பஸ் சேவை இயங்க தொடங்கியுள்ளது.

ரயில்வே ஸ்டேஷனில் காலை 5:30 மணிக்கு துறையின் சேவை இரவு 8:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக இயங்க உள்ளது. இதனால் தென்றல் நகர் ரோட்டில் குடியிருந்து வரும் 20க்கும் அதிகமான கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நோயாளிகள், மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ச்சியான சேவை பெற வழி கிடைத்துள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News