ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா கண்டும் இதுவரை புறகாவல் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூ.3.40 கோடி மதிப்பில் மே 29ல் திறக்கப்பட்டுள்ளது. தினமும் 50 டவுன் பஸ்களுடன் 300க்கும் அதிகமான டிரிப்கள் வந்து செல்லும்.ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா கண்டு ஒன்பது நாள் ஆகியும் இதுவரை புறகாவல் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.
சுற்றிலும் டாஸ்மார்க் கடைகளுடன் குடிமகன்கள் தொல்லை உள்ளதால் இரவு பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகி வருகிறது.தொடங்கி 9 நாட்கள் கடந்தும் பஸ் ஸ்டாண்ட் முன்பு அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டப் பட்டுள்ளது.இதனால் பெண் பயணிகள் குறிப்பாக இரவு நேரத்தில் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். விரைவில் செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply