25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நக்கீரரால் வணங்கப்பட்ட சிவபெருமான் அருளும் ஆலயம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நக்கீரரால் வணங்கப்பட்ட சிவபெருமான் அருளும் ஆலயம்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கிறது ஒப்பில்லாமணி உடனுறை மெய்நின்றநாதர் திருக்கோயில். இக்கோயிலின் முன்னே உள்ள தடாகத்தில்2016ம் ஆண்டு கட்டப்பட்ட பீடத்துடன் சேர்த்து81 அடி உயரமுடைய நின்ற நிலையில் உள்ள சிவபெருமானின் சிலை உள்ளது. இந்த சிலையே தென்னிந்தியாவின் உயரமான சிவன் சிலை எனவும் கூறப்படுகிறது.

சங்க காலத்தில் நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த வார்த்தைப் போருக்குப் பிறகு இந்தத் திருத்தலத்திற்கு வந்த நக்கீரர், இக்கோயிலில் முன்னிருக்கும் தடாகத்தில் நீராடி விட்டு ஈர மேனியோடு ஈசனிடம் சென்று தனது வாதத்தில் என்ன தவறு என்று முறையிட்டதாக இக்கோயில் வரலாறு கூறுகிறது. நக்கீரரால் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம் என்பதால்தான் இந்த ஊருக்கு நக்கீரமங்கலம் என்ற பெயர் உருவானதாகவும், அதுவே மருவி கீரமங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் இந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

தடாகத்தின் நடுவே இருக்கும் எண்பத்தி ஒரு அடி சிவன் சிலைக்கு நேராக கோயிலின் முன்னர் ஏழரையடி உயரத்தில் புலவர் நக்கீரருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கருவறையில் மெய்யே உருவாக மெய்நின்றநாதர் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறத்தில் தெற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார் அம்பிகை ஒப்பிலாமணி.கோயில் பிராகாரத்தில் விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் மற்றும் பைரவர் என அருள்பாலிக்கின்றனர். 

இத்தல இறைவனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. ஏறத்தாழ1,000 ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றை உடைய இக்கோயிலுக்கு800 ஆண்டுகளுக்குப் பிறகு2016 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.கீரமங்கலத்தை சுற்றி இருக்கும்20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளவர்களின் வீட்டுத் திருமணங்கள் இந்தக் கோயில் வளாகத்தில் நடைபெறுவது கூடுதல் சிறப்பாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News