ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா
ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம்.
பங்குனி பிரமோற்சவ விழாவினை முன்னிட்டு ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது கோதண்டராமர், அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா
பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக் கல்யாண திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா நேற்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பின்னர் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெற்றது. அனைத்து பக்தர்களுக்கும் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. 15-ந் தேதியன்று புஷ்பயாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்
0
Leave a Reply