தமிழ்நாடு அரசு பசுமை திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமை திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் (15.02.2025) நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.
செவலூர் ஊராட்சி சிலோன் காலனியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கில் சுமார் 7.26 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றாங்கால் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதில் பெரும்புலவர் கபிலர் நாற்றாங்கால் தொகுதி, அய்யன் திருவள்ளுவர் நாற்றாங்கால் தொகுதி, மருத்துவ பேராசான் அகத்தியர் நாற்றாங்கால் தொகுதி, தமிழ் மூதாட்டி ஓளவையார் நாற்றாங்கால் என மொத்தம் நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு 5.20 இலட்சத்துக்கு மேல் நாற்றாங்கால் வளர்க்கப்பட்டு வருகிறது.
இதில் தேக்கு, புளி, வேம்பு, பூங்கன், தோதகத்தி, வில்வம், கருவாகை, அயல்வாகை, குமிழ், செம்மரம், ஆத்தி, நீர் மருது, சந்தனம், மகா கனி, சீத்தா, கொய்யா, கொடிக்காய் புளி, பப்பாளி, நாவல், பலா, முருங்கை, பூவரசு, பெரு நெல்லி, தூங்கு மூஞ்சி வாகை, ஈட்டி, இலவம் பஞ்சு, மஞ்சள் கடம்பூ, வேங்கை, ஆனை குன்று மலை, சரங்கொன்றை, நொச்சி, செம்மரம், மலைவேம்பு, மஞ்சள் கொன்றை, பென்சில், சவுக்கு, ஆலி, முந்திரி, மயில் கொன்றை, பேய் இலவம், கரு நொச்சி, வாகை, மல்பேரி, சரக்கொன்றை, கருங்கொன்றை, சொர்க்கம், மாதுளை, செம்பருத்தி, சிறியா நங்கை, தூதுவளை உள்ளிட்ட சுமார் 50 வகைகளுக்கு மேலான நாற்றாங்கால் இனங்கள் உள்ளது.
குறிப்பாக பழம் தரும் மரக்கன்றுகள் வகைகள், நிழல் தரும் மரக்கன்று வகைகள், மருத்துவகுணம் கொண்ட மரக்கன்று வகைகள் மற்றும் பூத்துக் குலுங்கும் அழகுக்கான மரக்கன்று வகைகள் வளர்க்கப்படுகிறது.இந்த தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை இன்று நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply