25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர்.

 மனிதனின்  உயிர்வாழ்வதற்கு ஆக்சிஜன் தேவை . நமக்கு துாய்மையான ஆக்சிஜனை தருவதுடன் நம்மால் கழிவாக வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடை கிரகித்து பாதுகாக்கும்  என்பது தெரிந்தும், இயற்கையை மீறி ,மரங்களை பல்வேறு தேவைகளுக்காக அழித்து வருகிறோம்.

மனிதனுக்கு மட்டுமின்றி, அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு, இருப்பிடமாக மரங்கள் பாதுகாக்கிறது .இயற்கை சம நிலை , நோயற்ற வாழ்விற்கு, சுற்றுச்சூழலை பாதுகாக்க ,பெருகிவரும் நவீன தொழிற்சாலைகள், புதுப் புது வாகனங்கள், வெளியேற்றப்படும் குப்பைகளால் உருவாகும் நச்சு கழிவுகள் காற்று மாசுகள் அனைத்தையும் பசுமையான மரங்கள் கட்டுப்படுத்தி வருகிறது. வரும் சந்ததியினருக்கு காற்று மாசுகளை குறைத்து நுரையீரல்சம்பந்தமான நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனில் நம்மால் ஆன சுலபமான காரியம் மரக்கன்று நட்டு பராமரிப்பது மட்டுமே. 

கண்மாய் கரைகளில் பனை விதைகளை தொடர் நடவு செய்வதும், மெயின் ரோட்டின் ஓரம் உள்ள ஊராட்சி தரிசு நிலங்கள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து சோலையாக மாற்றியும், கீழக்கு ளம் கண்மாய், ராம்கோ நகர் உள்ள ஐந்து தெருக்களிலும்மரங்களைவளர்த்துபாதுகாத்துபசுமையானபகுதியாகவைத்திருக்கின்றனர். ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்காபுரத்தில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள் ஏற்படுத்தி முன்மாதிரி -யாக இருந்து வருவதால் இப்பகுதியே பசுமையான - மரங்கள் சூழ்ந்த பகுதியாக மாறி உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News