.தினை புட்டு.
தேவையான பொருட்கள்-
1 கப் தினை புட்டு மாவு,1/4 கப் துருவிய தேங்காய்,2 சிட்டிகை உப்பு,வெண்ணெய் - சிறிதளவு , தேவையான அளவு வெந்நீர்
செய்முறை -
தினை புட்டு மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.இதில் வெண்ணெய் சேர்த்து ஈரப்பதம் பருவம் வரை பிசைந்து கொள்ளவும். இந்த மாவை மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.
புட்டுக் குழாயில் துருவிய தேங்காய் கொஞ்சம் போட்டு, அதற்கு மேல் புட்டு மாவை சேர்க்கவும்அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவியது, இவ்வாறு மாற்றி குழாய் நிரம்பும் வரை சேர்க்கவும். இதனை மூடி போட்டு சூடான புட்டுக் குழாயில் வைத்து நன்கு ஆவி வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
இது ஆரோக்கியமான திணை புட்டுடன் நெய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
0
Leave a Reply