தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில்
முதல் முறையாக தமிழகத்தில் வடகிழக்கு ஆசிய பகு திகளில் அதிகம் வசிக்கும் ப்ளைன்டிவ் குயிலின் ஆண் பாலினம், ராஜபாளையத்தில் பறவை ஆர்வலர்களாய் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ப்ளைன்டில் குயில்கள் வடகிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள, இந்தப் பறவைகள் சோகமான, ஏக்கமான குரல் காரணமாகவே ப்ளைன் டிவ் குயில் என அழைக் கப்படுகிறது. ஆண்பறவை சாம்பல் நிற தலை, உடல், வயிற்று பகுதி ப்ரவுன் நிறம், சிவப்புக் கண் என ”இது தனித்துவத்துடன் உள்ளது.
தென் கிழக்கு பகுதியான சீனாவில் இனப்பெருக்கம்செய்யும் இவை பிரினியாக்கள், சிஸ்டிகோலாக்கள், தையல்சிட்டுகள், தேன் சிட்டுகளின் கூடுகளில் முட்டையிடும். இந்தியாவில் ஓடிசா, சத்தீஸ்கர் பகுதிக்கு குளிர்காலங்களில் வலசைவரும்.
2026 ஜன. 4ல் ராஜபா ளையத்தை சேர்ந்த பறவை ஆர்வலரான ராஜூஸ் கல் லூரி நேச்சர் கிளப்பை சேர்ந்த விஷ்ணு சங்கர், அவரது குழுவினர், இதில் ஆண் பறவையை அடை யாளம் கண்டுள்ளனர்.
0
Leave a Reply