சருமத்தில் உள்ள கருமை நீங்கி ஜொலிக்க
தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு சிறந்த கலவையாகும். இது சருமத்தில் இருக்கும் கருமையை குறைக்க பிரபலமாக அறியப்படும் சரும பராமரிப்பு டிப்ஸ் ஆகும். தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவு கலந்து பேஸ்ட்டாக தயாரிக்கவும்.அந்த பேஸ்ட்டை சருமத்தில் கருமையாக இருக்கும் இடங்களில் தடவி, 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரில் கழுவுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, வெண்மையாக சருமம் ஜொலிக்கும்.
வெள்ளரிக்காய் மற்றும் தேன் ஆகியவை பழுப்பு நிறத்தைக் குறைக்க உதவுகிறது. ஒரு வெள்ளரிக்காயை நன்றாக மசித்து அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து, பேஸ்ட்டாக உருவாக்க வேண்டும். பேஸ்ட்டை சருமத்தில் கருமையாக உள்ள இடங்களில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரில் கழுவி உலர சருமத்தை உலர வைக்க வேண்டும். இந்த சரும பராமரிப்பை தவறாமல் பயன்படுத்துவதன் மூலம், பழுப்பு நிறத்தை குறைக்கலாம்.
0
Leave a Reply