வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ....
வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் கருப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்டஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உடைகளை அணியலாம்.
கோடை காலத்தில் பெண்கள் அதிகமாக பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது மிக சிறந்தது. கோடை காலத்திற்கு ஏற்ற ஆடை பருத்தி ஆடைகளே ஆகும். பெண்கள் அணியும் உடைகள் அவர்களுக்கு இதமானதாக இருக்க வேண்டுமானால் அதற்கு பருத்தி ஆடைகளே சிறந்தது.பருத்தி ஆடைகள் தான் உடலை குளிர்ச்சியாகவைத்திருக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.
கோடையில் சிந்தடிக், பாலிஸ்டர் போன்ற உடைகள் அணிவதால் சிலருக்கு தோல் அரிப்புகள் வரும், ஆனால் காட்டன் அப்படி அல்ல, பருத்தியால் தோல் அரிப்புகளோ, தோல் வியாதிகளோவராது. அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும். ஆடைகள் மற்றும் உடலைத் துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகள் எல்லாம். பருத்தியிலேயே இருக்கிறது.
0
Leave a Reply